Monday, June 18, 2012

குழந்தைமரம்



ஆலமரமான குழந்தையை கறிவேப்பிலை
செடியாக மாற்ற நினைக்கிறது
ஆனால் கல்வியோஅதை
குரோட்டன்ஸ் செடியாகவே மாற்றி
விடுகிறது அக்குழந்தைக்கு தெரியாமலே
                                                                                                by -*முத்தமிழ் *

கடவுள்



கடவுள் எங்கே என்று கேட்டான்
நானோ கடஉள் என்று சொன்னேன் 
அவனோ வெளியே சென்று விட்டான்
கேட்ட கடவுளை தேட 
                                                                                   by -*முத்தமிழ் *

முதல் பரிசு



நேற்று   நடந்த கவிதை 
போட்டியில் ஒருவருக்கு முதல்
பரிசு கிடைத்தது அதில்
அனைவருக்கும்கிடைத்த முதல்
பரிசு அவரவர் கவிதை 
                                                                                                          by -*முத்தமிழ் *

காகித(ம்) இதயம்


ஒரு வெள்ளை காகிதம்
என் இதயத்தை அவளுக்கு
காட்டியது அவளோ என்
இதயத்தை அந்த காகிதம்
போல கசக்கி எறிந்துவிட்டால்
                                                                            by -*முத்தமிழ் *

மதிய உணவு தந்த காமராஜரே


மதிய உணவு தந்த மன்னவரே 
எனமதியில் மதியாய் ஒளிர்பவரே ;
அறிவு பசியை தூண்டி  எழுப்ப
வயிற்று பசியை பசியை கலைந்தவரே;
காவி அணியா துறவியரே  வெள்ளை 
சட்டை அணிந்த காந்தியாரே; 
ஏற்றத் தாழ்வை எங்கும் நீக்க
இறுதி வரையிலும் உழைத்தவரே; 
ஏற்ற பதவியின் புனிதம் காக்க 
உறுதியை நேர்மையாய் இருந்தவரே; 
உங்கள் உருவம் காட்ட கரும் 
பலகை கருமையாய் இருக்கிறதோ! 
உங்கள் உள்ளம் காட்ட அதில் 
வெள்ளை எழுத்துக்கள் பிறக்கிறதோ! 
கெப்ளரும் நியுட்ட்னும் தெரியவிலை கடும் 
பசியால் மூளைக்கு புரியவில்லை ;
எங்கள் பிணிதிர வந்திரே மதியம் 
வயிற்றுக்கு உணவு தந்திரே ;
பாதம் பணிகிறோம் பெரியவரே -மதிய 
உணவு தந்த காமராஜரே .
                                                            by -*முத்தமிழ் *